நான் நல்லா காமெடி பண்ணுவேன் தெரியுமா?- சிரிக்கப் பேசுகிறார் ‘சேயநாயகி’ ரியாஸ்கான்

By காமதேனு

‘‘நானும், சுந்தர்.சி-யும் பல வருட நண்பர்கள். ‘வின்னர்’ படம் எடுத்த டைம்ல இருந்து இப்போ ‘சங்கமித்ரா’ வரைக்கும் அப்பப்போ சினிமா பற்றி நிறைய பேசிப்போம். சமீபத்துல ஒருநாள் ஜிம்ல இருந்தப்ப என்ன அழைச்சார். வீட்டுக்குக் கூட போகாம அவரோட ஆபீஸுக்குப் போனேன். அப்பத்தான்  ‘சேயநாயகி’க்கு  அச்சாரமாச்சு” சொல்லிவிட்டு சத்தமாகச் சிரிக்கிறார் ரியாஸ்கான்.

சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் ‘நந்தினி’ தொடரில் ‘சேயநாயகி’  என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் கலக்கி வரும் ரியாஸ்கான்,  ‘காமதேனு’வுக்குப் பேட்டி என்றதும் கலகலப்பாகப் பேசத் தொடங்கினார்.

சிக்ஸ்பேக் வெச்சிருக்கிற சினிமா வில்னான நீங்கள் எப்படி டெலி சீரியல்ல நடிக்க சம்மதிச்சீங்க?

ரசிகர்களுக்கும் சரி, இங்கே இருக்குற பல இயக்குநர்களுக்கும் சரி, ரியாஸ் நல்லா சண்டை போடுவார். வில்லன் வசனம் பேசுவார்னு மட்டும்தான் தெரியும். ஆனா, நான் நல்லா காமெடி பண்ணுவேன் தெரியுமா? நான் ஜாலியா அரட்டைக் கச்சேரி பண்ற ஆளுங்கிறது பலருக்குத் தெரியாது. என்னோட இந்த முகங்கள் எல்லாம் சுந்தர்.சி-க்குத் தெரியும். அதனாலதான் திருநங்கை கதாபாத்திரம் என்றதும் என்னோட ஞாபகம் அவருக்கு வந்துருக்கு. அதுமட்டுமில்ல... சினிமாவுல மட்டும்தான் நடிப்பேன் என்பதெல்லாம் பழைய காலம்.  எங்கே போனாலும் நடிப்பு நடிப்புதான். மீடியா இன்னைக்கு ரொம்பப் பெருசு. எங்கே நல்லா பண்றோமோ அது ரீச் ஆகிடும்.  காலத்துக்கு ஏற்றமாதிரி நாம மாறலன்னா கலையும் காலமும் நம்மைப் பின்னுக்குத் தள்ளிடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE