“அந்தக் காலம் எல்லாம் மலையேறிடுச்சு!” - நிஜம் சொல்லும் நெறியாளர் கோபிநாத்

By காமதேனு

யு-டியூப் தளத்தில் ‘லிட்டில் டாக்ஸ்’ சேனல் வழியே பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விஜய் டிவி-யில் ‘டிவைடெட்’ ஷோ, வழக்கம் போல ‘நீயா நானா’வின் பரபரப்பு, ‘ரீடிஃபைன்’ என்ற பெயரில் பேச்சாற்றலுக்கான வொர்க் ஷாப், வெப் சீரீஸ், நடிப்புக்கான புதிய கதைகள் கேட்பது என எறும்புகளை மிஞ்சிய சுறுசுறுப்புடன் சுற்றி வருகிறார், தொலைக்காட்சி நெறியாளர் கோபிநாத். அவருடன் சில நிமிடங்கள் பயணித்ததிலிருந்து…

புதிய நிகழ்ச்சிகள் உங்களது நடை, உடை, பாவனைகளையும் மாற்றியிருக்கிறதே?

இந்த நியூ லுக்குக்குப் பெரிய வரலாற்றுக் காரணமெல்லாம் கிடையாது. ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட லுக் கொடுக்கணும்னு ‘டிவைடெட்’ நிகழ்ச்சித் தயாரிப்பாளர் தரப்பில் விரும்பினாங்க. அதனாலதான் இந்த மாற்றம். ஹேர் ஸ்டைல் மாற்றத்தை ‘டோனி அண்ட் கை’ கணேசன் பார்த்துக்கிட்டார். ரொம்ப நாளா எனக்கு காஸ்ட்யூம்ஸ் டிசைன் பண்ணணும்னு சொல்லிக்கிட்டே இருந்த சத்யா இந்த நிகழ்ச்சி வழியா அந்த ஆசையை தீர்த்துக்கொண்டார். வழக்கமான கோட் ஸூட் கோபிநாத் இப்படி மாற இதுதான் காரணம்.

ஒரே சமயத்தில் ‘லிட்டில் டாக்ஸ்’ டிஜிட்டல் மீடியா பயணம், மற்றொரு பக்கம் ‘ரீடிஃபைன்’ நேரடி வொர்க் ஷாப் நிகழ்ச்சி. இது வித்தியாசமான அணுகுமுறையாக இருக்கிறதே?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE