த்ரீ ரோஸஸ் வித் ஒன் டான்ஸர்!

By காமதேனு

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி நடித்துவரும் ‘என்.ஜி.கே’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ள சூழலில், இப்படத்துக்காக தயார் செய்து வைத்திருந்த அனைத்துப் பாடல்களையும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார்கள். புதிதாக மீண்டும் இசையமைப்பு பணிகளை ஆரம்பிக்கவிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
‘ஜூனியர்’ ராஜாவுக்கு என்னே பெருந்தன்மை!

பாலிவுட்டில் ஒரு படத்தைத் தாண்டி ஸ்ருதிஹாசன் வேறு எந்தவொரு படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில் முதன்முறையாக முன்னணி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு இசையுடன் கூடிய டாக் ஷோ ஒன்றை உருவாக்கி வருகிறார். நிகழ்ச்சி தொடங்கியதும் முதல் 2 பாடல்களை ஸ்ருதிஹாசன் பாடுவார், அதனைத் தொடர்ந்து பிரபலங்களுடன் கலந்துரையாடுவார். முதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள முதல் பிரபலம் தமன்னாவாம்!
வாழ்விழந்தோருக்கான இன்னொரு 100 நாள் வேலைத்திட்டம் போல!

இயக்குநர் விஜய் - பிரபுதேவா கூட்டணி ‘தேவி 2’ படத்துக்காக மீண்டும் இணைந்திருக்கிறது. முதல் பாகத்தில் தமன்னா மட்டுமே நாயகியாக நடித்தார். இதில் தமன்னா, நித்யா மேனன், ஏமி ஜாக்சன் என மூன்று நாயகிகள். மொரீசியஸ் தீவில் பெரும்பாலான காட்சிகளை முடித்துவிட்டுத் திரும்ப திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
த்ரீ ரோஸஸ் வித் ஒன் டான்ஸர்!

கடைசி நேரத்தில் ‘சீமராஜா’ வெளியீட்டில் பிரச்சினை ஏற்பட, உதவிகேட்டுச் சென்றவர்கள் எல்லாம் கைவிரிக்க, சிவகார்த்திகேயன் தானாகவே முன்வந்து உதவியிருக்கிறார். அதாவது, தயாரிப்பாளருக்கு அடுத்த படத்துக்கான தேதிகள் கொடுத்திருக்கிறார். ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கும் அந்தப் படத்தை ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்யவும் ரூபன் எடிட்டிங் செய்யவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
சிக்கனமாய் செலவுசெய்து சிறப்பாக படமெடுக்க வாழ்த்துகள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE