மாமாவின் 2.0 அனுபவம், மருமகனுக்குப் பாடம்!

By காமதேனு

இந்தித் திரையுலகில் இதுவரை வெளியான காதல் படங்களில் ‘குச் குச் ஹோதா ஹை’ மிக முக்கியமான இடத்தில் இருக்கும். அந்தப் படத்தில் கரண் ஜோஹர் இயக்கத்தில் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, கஜோல் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது ‘குச் குச் ஹோதா ஹை 2’ படத்தை எடுத்தால் யாரையெல்லாம் நடிக்கவைப்பீர்கள்? என்று கரண் ஜோஹரிடம் கேள்வி எழுப்பினார்கள். “ரன்பீர் கபூர், அலியா பட், ஜான்வி கபூர்” என்று பதிலளித்திருக்கிறார் கரண்.

நாங்க இன்னும் முதல் படத்தையே நல்லா பார்க்கல சார்!

‘கீதா கோவிந்தம்’ தெலுங்குத் திரைப்படம் 110 கோடி வசூலைத் தாண்டி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஆனால், அதுவே அப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவின் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. ’கீதா கோவிந்தம்’ படத்தில் ஹீரோவுடன் மிக நெருக்கமாக நடித்திருந்தார் ராஷ்மிகா. இதைத் தொடர்ந்து, திருமணம் நிச்சயமான பொண்ணு இப்படியெல்லாம் நடிக்கலாமா என பலரும் சர்ச்சையைக் கிளப்ப, ஜூலை 2017-ல் நடந்த ராக்‌ஷித் ஷெட்டி - ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம் அத்துடன் முறிந்துவிட்டது. வேறு நல்ல வாய்ப்புகள் வருவதால், இனி கொஞ்ச காலத்துக்கு நடிப்பில்தான் கவனம் என்று முடிவு எடுத்திருக்கிறாராம் அம்மணி.

நேற்றுபோல் இன்று இல்லை... இன்றுபோல் நாளையில்லை..!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE