நண்பனோட சேர்ந்து கலக்குறது செம த்ரில்- ‘ஜெ3’ - காம்போ நண்பர்கள் கதிர் - மதன் கலக்கல் பேட்டி

By காமதேனு

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘பூவே பூச்சூடவா’, ‘செம்பருத்தி’ தொடர்களின் செகண்ட் லீட் கதாபாத்திர நடிகர்கள் மதன், கதிர் இருவரும் அதே சேனலில் ‘ஜில் ஜங் ஜக் - ஜெ3’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாகி இருப்பதுதான் இந்த வார சின்னத்திரை டாக்!

கலாட்டா, கச்சேரி, டாஸ்க், ஜாலி எனக் கலவையாகத் தொடங்கியுள்ள ‘ஜில் ஜங் ஜக்’ நிகழ்ச்சியின் முதல் அத்தியாய ஷூட்டிங்கில் இருந்த இருவரையும் ‘காமதேனு’வுக்காக மடக்கினோம்.

“என் நண்பனே தொடங்கட்டும்” எனக் கதிர் வழிவிட மதன் ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

“ஜீ தமிழில் ‘பூவே பூச்சூடவா சுந்தர்’ என்ற அடையாளத்தோட சுத்திட்டு இருக்கிற எனக்கு எதிர்பாராம அமைஞ்ச பக்கா ரியாலிட்டி ஷோ இது. இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில தொகுப்பாளரா ஓடணும்கிறது ரொம்ப நாள் ஆசை. இப்போ செலிப்ரட்டி, மாடல்கள் எனப் பெண்களை மையமாக வைத்து பெருசா புத்திமதி எதுவும் சொல்லாமல் ஃபிசிகலி, மென்டலி பின்னணியில அதுவும் செம ஜாலியா ஒரு நிகழ்ச்சின்றப்போ அதை அழகா கொண்டுபோகணும்கிற பொறுப்பு கூடியிருக்கு. என்னுடன் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ல கலக்கின என்னோட நண்பன் இதோ பக்கத்துல இருக்கானே.. இந்த கதிர் இருக்கான். நானும், இவனும் எப்போ சேர்ந்தாலும் அதுல ஒரு கதை இருக்கும். ஜெராக்ஸ் பிரதிகள் போலதான். அப்படி ஒரு அலைவரிசை. இப்போ புதுசா ஒரு ஷோ. அதுவும் செம எனர்ஜியா ஒரு நிகழ்ச்சி. அந்த இடம் எவ்ளோ கலகலப்பா மாறுதுன்னு இனி பார்க்கலாம்’’
- என மதன் முடிப்பதற்குள் கதிர் குறுக்கிட்டு,

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE