எங்கோ போய்க்கொண்டிருந்த என் வாழ்க்கை இப்படி மாறிடுச்சே..!- ஆச்சரியக் கனவில் நாயகி அஸ்வினி

By காமதேனு

‘‘இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்வேன்னு கனவிலும் நினைத்ததில்லை. என்னை மாதிரி உடல் பருமனாக இருக்குற பல பெண்களுக்கு தன்னம்பிக்கையை விதைக்கும் சக மனுஷியா இப்ப நான் மாறியிருக்கேன். தினம் தினம் இன்ஸ்டாகிராம், முகநூல்னு பாராட்டுகள் குவியுது. இது என் வாழ்க்கையின் பொன்னான தருணம்!’’ - என்று பெருமிதம் பொங்க புன்னகைக்கிறார் அஸ்வினி.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியல் 100 அத்தியாயங்களைக் கடந்தும் வரவேற்பை அள்ளிச் சென்றுகொண்டிருக்கிறது. தொடரில் ‘ராசாத்தி’யாக வந்து அனைவரையும் கட்டிப்போடுகிறார் அஸ்வினி. அவருடன் சின்னதாய் ஒரு சந்திப்பு.

 `காமதேனு’ வாசகர்களுக்கு உங்களைப் பற்றி ஒரு சின்ன இன்ட்ரோ குடுங்களேன்?

அது ஒரு பொங்கல் நேரம். பெங்களூருல இருக்கிற எங்க வீட்ல செலிப்ரேஷன் களைகட்டிக்கொண்டிருந்தது. என்னோட அண்ணி ஹரிணி மீடியா செலிப்ரட்டி. அவங்க ஏற்பாட்டுல வீட்ல ஒரு ரியாலிடி நிகழ்ச்சி. அந்த ஷோவுல நானும் ஒரு போட்டியாளர். அப்படி நடந்த அந்த நிகழ்ச்சிதான் அஞ்சரை வருசத்துக்கும் மேல ஐடி துறையில வேலை பார்த்துக்கிட்டிருந்த என்னை இந்த டெலிவிஷன் தொடருக்குள்ள கொண்டு வந்துடுச்சு. எங்கோ போய்க்கொண்டிருந்த என் வாழ்க்கை இப்படி மாறும்னு நினைக்கவே இல்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE