தனக்காக யோசிக்காதவன் எனக்காக யோசித்தான்!- சிவகார்த்திகேயனைக் கொண்டாடும் ‘கனா’ அருண்ராஜா காமராஜ்

By காமதேனு

சிறு வயதில் தன்னோடு கிரிக்கெட் ஆடிய தனது நண்பர்களில் ஒருவரான அருண்ராஜா காமராஜின் இயக்குநர் கனவை ‘கனா’ படம் மூலம் நிறைவேற்றி வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். “தனக்காகக்கூட இல்லாமல் எனக்காகத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய அவனுக்கு இந்தப் படத்தின் வெற்றியையும் தாண்டி, பெரிதாக நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்று சொல்லும்போதே நெகிழ்கிறார் அருண்ராஜா காமராஜ். ‘காமதேனு’ இதழுக்காக அவருடன் பேசியதிலிருந்து...

‘கனா’ தலைப்பே கதையைச் சொல்லிவிடுகிறது. தியேட்டருக்குள் ரசிகர்களை எப்படிக் கட்டிப்போடப் போகிறீர்கள்?

கனா என்றால் கனவு. ``கனவு காணுங்கள். கனவுகளே எண்ணங்களாக மாறும். உங்கள் எண்ணங்களே செயலாக மாறும். வெற்றியடையும்'' என்ற அப்துல்கலாம் ஐயாவின் வார்த்தைகளிலிருந்து வந்ததுதான் தலைப்பு. கதையும் இந்த வார்த்தைகளைப் பின்னணியாக கொண்டதுதான் என்றாலும், விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், கிரிக்கெட் வீராங்கனையாகும் தன் கனவை எப்படி எட்டிப்பிடிக்கிறாள் என்பதை சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறேன். இதற்காக வங்கதேச அணிக்குப் பயிற்சியாளராக இருக்கும் தேவிகா பல்சீகர், தமிழ்நாடு பயிற்சியாளர் ஆர்த்தி ஆகியோரிடம் பேசி, எந்த மாதிரியான பெண்கள் எல்லாம் கிரிக்கெட் விளையாட வருகிறார்கள், கிராமத்திலிருந்து வருபவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதெல்லாம் தெரிந்துகொண்டேன். கூடவே, என் நிஜ வாழ்க்கை அனுபவங்களையும் கொஞ்சம் சேர்த்திருக்கிறேன்.

கிரிக்கெட் வீராங்கனை பாத்திரம், ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. எப்படி அவரைத் தேர்வு செய்தீர்கள்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE