இளைஞர்கள் தமிழக அரசியலை விழிப்புடன் கவனிக்கிறார்கள்!- இசையமைப்பாளர் - நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேட்டி

By காமதேனு

கா.இசக்கி முத்து

இளம் வயதிலேயே சாதித்துக் கொண்டிருக்கும் இளைஞர் ஜி.வி.பிரகாஷ். பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என்று பல தளங்களில் இயங்கினாலும், சமூக வலைதளங்களில் தமிழ் பற்றுள்ள இளைஞராகவும் பரிமாணம் காட்டுபவர். கைவசம் உள்ள படங்கள் மற்றும் நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்து அவருடன் பேசியதில் இருந்து...

அடுத்த படமான ‘அடங்காதே' நீண்ட நாட்களாக தயாரிப்பளவிலேயே இருக்கிறதே... என்ன காரணம்?

ஒவ்வொரு படத்தின் வெளியீட்டையும் நாம் என்ன திட்டமிட்டாலும், நடப்பது வேறு ஒன்றாகத்தான் இருக்கும். அப்படித் தாமதமாகும்போது காரண காரியங்களை அலசுவதை விடுத்து, படத்தை எப்படி இன்னும் மெருக்கேற்றலாம் என்று யோசிப்பதே புத்திசாலித்தனம். அந்த வகையில் ‘அடங்காதே’ வெளியீடு கொஞ்சம் தாமதம்தான் என்றாலும், படம் மெருகேறி இருக்கிறது என்று அடித்துச் சொல்லலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE