ஹோம்லி இமேஜை உடைக்கப் போகிறேன்!- நந்திதாவின்  அடுத்த அவதாரம்

By காமதேனு

‘அட்டக்கத்தி பூர்ணிமா’, ‘எதிர்நீச்சல் வள்ளி’ என்று திரையில் என்ட்ரி ஆகி, அடுத்து வந்த தமிழ்ப்படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலும் பட்டையைக் கிளப்பிய நந்திதாவுக்கு தெலுங்கில் ‘சீனிவாசா கல்யாணம்’ படம் கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது. செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ உள்பட தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் பிஸியாக இருக்கும் அவரை காமதேனு இதழுக்காக சென்னையில் சந்தித்தேன். மாடர்ன் பொண்ணாக மாறியிருந்த அவருடன் பேசியதிலிருந்து...

தெலுங்கில் நடித்த 2 படங்களுமே ஹிட். எப்படி உணர்கிறீர்கள்?

ரொம்ப சந்தோஷம். ஆனால், கலைக்கு மொழி முக்கியமில்லை. எந்த மொழியில் ஹிட் கொடுத்தாலும் சந்தோஷம்தான். ‘சதுரங்க வேட்டை’, ‘டார்லிங் 2’ படங்களின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிச்சுருக்கேன். ஒரே நேரத்தில் 10 கதைகள் வந்தால், எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுக் கொள்வதில்லை. கதை, நமக்கான கதாபாத்திரம் எல்லாவற்றையும் பார்த்துத்தான் ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும், எந்த ஒரு படத்தையும் முன்கூட்டியே இது ஹிட் என்று யாராலும் கணிக்க முடியாது இல்லையா? மக்களின் முடிவில்தான் எல்லாம் இருக்கிறது.

தமிழ் ரசிகர்கள் - தெலுங்கு ரசிகர்கள் ஒப்பிடுங்களேன்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE