ரொம்ப சிம்பிள்... செம எனர்ஜி... அன்பானவங்க..!- ஜாக்குலின் சொல்லும் நயன்தாரா மந்திரம்!

By காமதேனு

‘‘என்னைப் போல தொலைக்காட்சி தொகுப்பாளரா இருந்த சிவகார்த்திகேயன் அண்ணா, சினிமாவுக்குப் போனாலும் சேனலைக் கலக்கிட்டு இருக்கிற என் சீனியர் டிடி அக்கா... இவங்க எல்லாம் சேனல்ல மட்டும் இருந்தப்ப, ‘நாங்க இனி, சினிமாவுல கலக்கப் போறோம்’னு சொன்னதில்ல. அவங்களுக்கு அந்த வாய்ப்புகள் அதுவாவே அமைஞ்சுது; இப்ப கலக்கிட்டு இருக்காங்க. ஆனா, நான் இங்கே வரும்போதே, ‘நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்’ என்ற நடிப்பு நிகழ்ச்சி ஆடிஷனுக்குத்தான் வந்தேன்.
ஆரம்பத்துல இருந்தே நடிப்பு மேல எனக்கு அவ்வளவு ஈர்ப்பு உண்டு. இது இப்போ சாத்தியமாகியிருக்கு!’’

“சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கா..?” என்று நான் கேட்டதுக்குத்தான் இப்படி நீட்டி முழக்கி பதில் சொன்னார் விஜய் டி.வி-யின் ‘கலக்கப் போவது யாரு’ புகழ் தொகுப்பாளினி ஜாக்குலின்! கடந்த வாரம் வெளியான `கோலாமாவு கோகிலா’வில் நயன்தாராவுக்குத் தங்கையாக வந்து கவனம் ஈர்த்திருக்கும் சாக்லேட் கேர்ள் ஜாக்குலின், எனது இன்னும் சில கேள்விகளுக்கும் தனது டிரேட் மார்க் சிரிப்புடன் பதில் சொன்னார்.

 முதல் படத்திலேயே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் சேர்ந்து நடிச்சிருக்கீங்க, அவங்களப் பத்தி...?

நயன் மேம்கிட்ட போன்லகூட பேசினதில்ல. ஷூட்டிங்லதான் அவங்கள முதன்முதலா பார்த்தேன். அவங்க எவ்ளோ பெரிய சீனியர்னு நமக்குத் தெரியும். முதல் நாள் ஷூட்டிங்ல எனக்கு உள்ளுக்குள்ள லப்டப் சத்தம் அதிகரிக்க ஆரம்பிச்சுடுச்சு. அவங்ககூட நடிக்கும்போது, ‘மூணு டேக், நாலு டேக்!’னு எக்ஸ்ட்ரா வாங்கிட்டே இருந்தா ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு ஒரு பயம். ஆனா, அடுத்தடுத்த நாட்கள்ல இயல்பா போக ஆரம்பிச்சுட்டோம். அவங்க ரொம்ப சிம்பிள். செம எனர்ஜி. அன்பானவங்களும்கூட!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE