விஸ்வரூபம் 2- திரை விமர்சனம்

By காமதேனு

‘உமர் சாகணும், அல்லது, நான் சாகணும். அதுவரை இந்தக் கதை தொடரும்’ என ‘விஸ்வரூபம்’ க்ளைமாக்ஸில் கமல் பேசும் வசனத்தின் நீட்சியே ‘விஸ்வரூபம் 2’.

‘ரா’ உளவாளியான ‘விஸ்’ (கமல்) தனது மனைவி நிருபமா (பூஜா குமார்), சக உளவாளி அஷ்மிதா (ஆண்ட்ரியா), உளவுத்துறை அதிகாரி சேகர் கபூர் ஆகியோர் உதவியுடன் லண்டனையும் டெல்லியையும் காப்பாற்ற முயல்வதுதான் இந்தப் படத்தின் கதை. கூடவே, உமரையும் (ராகுல் போஸ்) அவரது கூட்டாளிகளையும் வேட்டையாடுகிறார் கமல்.
விஸ்வரூபம் 2 - திரை விமர்சனம்

இந்த மண்ணோட குழந்தைங்க இங்கதான் இருக்கணும். அமெரிக்காவுல அடிமையா இருக்கக் கூடாது என நாசர் சுட்டுக்கொல்லும் காட்சியில் ஒருதரப்பு மனநிலையையும், விஸாம் அகமத் காஷ்மீரி கதாபாத்திரத்தில் இஸ்லாமியராக வாழ்ந்து, அரசுக்காகப் போராடும் உளவாளியாக இன்னொரு தரப்பு மனநிலையையும் கடத்துகிறார் கமல்.

திரைக்கதையில் கோட்டை விட்டதை ஆங்காங்கே நடிகர் கமலும் வசனகர்த்தா கமலும் பிடிக்க முயன்றிருப்பது ஆசுவாசம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE