அதில் ஜோதிகா பேசவே இல்லை... இதில் பேசிக்கிட்டே இருப்பாங்க!- ‘காற்றின் மொழி’இயக்குநர் ராதா மோகன் பேட்டி

By காமதேனு

வாழ்க்கையின் நடைமுறை யதார்த்தங்களை காட்சியமைப்புகளாக வைத்து படங்களை இயக்குபவர் ராதா மோகன். ‘மொழி’ படத்தின் மூலம் பெரிய வெற்றியைக் கண்ட அதே ராதா மோகன் - ஜோதிகா இணை, தற்போது ‘காற்றின் மொழி’ படத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது. இது இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தும்ஹாரி சுலு’ படத்திம் தமிழ் ரீமேக் என்பது கூடுதல் எதிர்பார்ப்பைக் ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட பணியில் மும்முரமாக இருந்த ராதா மோகன் ‘காமதேனு’விடம் பேசியதிலிருந்து...

’தும்ஹாரி சுலு’ ரீமேக் வாய்ப்பு எப்படி அமைந்தது?

திடீரென்று ஒருநாள் ஜோதிகாவே போன் பண்ணி, ‘தும்ஹாரி சுலு’ படம் பார்த்தீங்களா? அதை நாம ரீமேக் பண்ணா என்ன என்றார். அதுக்கப்புறம்தான் அந்தப் படத்தைப் பார்த்தேன். ரொம்பவே பிடிச்சிருந்தது. பேசவே முடியாமல் கண்களாலேயே அனைத்தையும் சொல்ற ‘மொழி’ ஜோதிகாவுக்கு... நேர் எதிரா நிமிஷ நேரம் சும்மா இருக்க முடியாத இந்த வாயாடி கேரக்டர். அதுல பேசவே மாட்டாங்க... இதில் பேசிக்கிட்டே இருப்பாங்க என்பதே நல்ல ‘கான்ட்ராஸ்ட்’டா தோணுச்சு! ’மொழி’ பார்த்துட்டு நிறைய பேர், ’மறுபடியும்  நீங்க 2 பேரும் எப்போ சேர்ந்து படம் பண்ணப் போறீங்க” என்று என்னிடம் கேட்டுக்கிட்டுதான் இருந்தாங்க. நல்ல கதை வரும்போது பண்ணலாம்னு நினைச்சிருந்தேன்... நானும் ஓகே சொல்ல...  ‘பாஃப்டா’ தனஞ்ஜெயன் சார் ரீமேக் உரிமை வாங்கிவிட்டு என்னிடம் பேசினார். சட்டுனு ஆரம்பிச்சு, ஒரே மூச்சா முடிச்சுட்டோம். 

இந்திப் படத்தில் வித்யா பாலன் ஒரு நடுத்தர குடும்பத்தின் பொறுப்பான தலைவி. அன்பான மனைவி, பாசமுள்ள அம்மா... இங்கே தமிழுக்காக என்ன மாற்றம் செய்திருக்கிறீர்கள்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE