ஹீரோவுடன் டூயட் பாடினால்தான் ஹீரோயினா..?- ப்ரியா பவானி சங்கர் பளிச் பேட்டி!

By காமதேனு

செய்தி வாசிப்பாளர், டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர், சீரியல் நாயகி என்று படிப்படியாக வளர்ந்து ‘மேயாத மான்’ நாயகியானவர் ப்ரியா பவானி சங்கர். இரண்டாவதாக நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படமும் வெற்றி என்பதால் இந்த மயிலாடுதுறைப் பொண்ணு செம குஷி. ஹாட்ரிக் வெற்றிக்காகக் காத்திருக்கும் அவரிடம் ‘காமதேனு’ இதழுக்காகப் பேசினேன்.

சினிமா கதாநாயகி வாழ்க்கை எப்படியிருக்கிறது?

மூன்று வருடம் செய்தி வாசிப்பாளர், அடுத்த மூன்று வருடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று கேமிரா பழகிவிட்டது. அதனால், சினிமா என்றால், ரொம்பப் பிரம்மாண்டமானது என்ற பிரமிப்போ, பயமோ இல்லை. தொலைக்காட்சியிலிருக்கும் போது எப்படிப் படப்பிடிப்புக்குச் செல்வேனோ, அப்படித்தான் 'மேயாத மான்' படப்பிடிப்புக்கும் போனேன். சினிமா கதாநாயகி என்றெல்லாம் பகட்டுக் காட்டிக்கொள்ளவில்லை. எப்போதுமே வேலையில் நேர்மையாக இருப்பேன். அதே நேர்மையுடன் படத்தில் நடிக்கிறேன். அவ்வளவுதான்.

இரண்டாவது படத்திலேயே 2-வது நாயகியாக ஒப்புக்கொண்டீர்களே?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE