ஒரே சிரிப்புதான் போங்க!

By காமதேனு

மகள்களுக்குத் திருமணம் எப்போது என்ற கேள்வியைக் கேட்டால், “எனது திருமணம், விவாகரத்து உள்ளிட்ட எதையுமே என் அப்பா முடிவு செய்யவில்லை. அதே போல்தான், என் மகள்களின் திருமணம் குறித்து அவர்களைத்தான் கேட்க வேண்டும்” என்று கூறிவிடுகிறார் கமல்.
என்ன அவசரம், பொண்ணுங்க பிரசாரத்துக்குப் போக வேணாமா?

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு வில்லனாக நடிக்கும், ‘மாநாடு’ படத்தின் முதல்கட்டப் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. பெரும்பாலான காட்சிகளை கோயம்புத்தூரிலும், சில முக்கியமான காட்சிகளை மட்டும் லண்டனிலும் படமாக்கத் திட்டம். நடிகர்கள் தேர்வில் தீவிரம் காட்டிவருகிறார் இயக்குநர்.
ஹீரோ தனுஷா இருந்தா எப்டி இருக்கும்?!

நாயகனாக நடித்துக்கொண்டே படத்தையும் இயக்கி வந்த நவீன், முதன்முறையாக இயக்குநர் பொறுப்பை மட்டும் கவனிக்கவுள்ளார். விஜய் ஆண்டனி, ஷாலினி பாண்டே நடிக்கவுள்ள இப்படத்தை சிவா தயாரித்து வருகிறார். இன்னும் சில தமிழ்ப்பட வாய்ப்புகளும் ஷாலினிக்குக் கிடைத்திருக்கிறது.
‘மகாநடி’யில முகம் காட்டிய மகத்துவமோ!

விஷ்ணு விஷால் - ரஜினி தம்பதிக்கு ஆர்யா என்ற மகன் இருக்கிறான். தற்போது இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்துக்கு விண்ணப் பித்திருக்கிறார்கள். மறுபடியும் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று நண்பர்கள் எடுத்த கடைசி முயற்சியும் பயனளிக்கவில்லையாம்.
‘ராட்சசன்’, ‘ஜெகஜால கில்லாடி’ படத்துல நடிக்கிறார்னு சொல்லவந்தேன்...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE