அமலாவின் அனுபவம் பேசுகிறது!

By காமதேனு

முன்னணி நடிகையாக இருக்கும்போதே திருமணம், விவாகரத்து எனப் பல பிரச்சினைகளைச் சந்தித்துவிட்டார் அமலாபால். தற்போது “பெண்களில் பலவீனமான மனம் கொண்டவர்களுக்கு சினிமாத் துறை சரியாக இருக்காது. சினிமாவில் இருக்கும் பெண்கள் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
அமலாவின் அனுபவம் பேசுகிறது!

இ சையமைப்பாளராக பாலிவுட்டில் அறிமுகமாகியிருப்பதைத் தொடர்ந்து, அங்கே நடிகராகவும் அறிமுகமாகவுள்ளார் ஜி.வி.பிரகாஷ். சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளிலும் தயாராகிறது.
சிக்குபுக்கு ரயில் மும்பைக்குப் போகுதோ!

மாதவன், பாபி சிம்ஹா, ப்ரியாமணி ஆகியோரைத் தொடர்ந்து சுனைனாவும் வெப்-சீரிஸில் நடிக்கத் தொடங்கிவிட்டார். ஜே.எஸ்.நந்தினி இயக்கிவரும் ‘நிலா நிலா ஓடி வா’ என்ற வெப் சீரிஸில் அஸ்வினுடன் நடித்து வருகிறார். ரத்தக் காட்டேரியாக அவர் நடித்துவருவதுதான் இதில் ஹைலைட்
கொஞ்சம் வாய்ப்பு குறைஞ்சுட்டா, பேயாயிடுறாங்களே ஏன்?

‘விஐபி 2’ படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்த கலைப்புலி தாணு, தனுஷை 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதில் ஒரு படத்தை தனுஷே இயக்கி, நடிப்பார் எனத் தெரிகிறது. 
மீதி 2 படங்களுக்கு வெவ்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வருகிறார்.
மூணுன்னு சொல்லாதீங்கப்பா, பயந்து வருது...!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE