நடிகைன்னா நடிச்சுக்கிட்டே மட்டும்தான் இருக்கணுமா?- பிரியமுடன் பேசுகிறார் பிரியா ராமன்!

By காமதேனு

"டி.வி. சீரியல்ல வர்ற ஒருகேரக்டர் மேல ஆடியன்ஸ் இப்படியும் அன்பு செலுத்த முடியும்கிறத பார்த்து ரொம்ப நாளாச்சு. அப்படியொரு அன்பு இப்போ ‘செம்பருத்தி’ தொடர் மூலமா எனக்குக் கிடைச்சிருக்கறத நினைக்கிறப்ப அவ்ளோ சந்தோஷம்’’ என்கிறார் பிரியா ராமன்.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’ தொடரில் அகிலாண்டேஸ்வரியாக அசத்திவரும் பிரியா ராமன், ‘ஜீன்ஸ்’ (Genes) என்ற புதிய கேம் ஷோவையும் கையில் எடுத்திருக்கிறார். அவரோடு உரையாடியதிலிருந்து…

நிகழ்ச்சித் தொகுப்பாளினி என்ற இந்தப் புதிய அவதாரம் சவுகரியமாக இருக்கிறதா?

மூணு வருஷத்துக்குப் பிறகு சின்னத்திரைக்குள்ள ரீ என்ட்ரி ஆகிறேன். வடிவேல் சொல்ற மாதிரி, ரூம் போட்டு யோசிச்சிருந்தாக்கூட‘செம்பருத்தி’ மாதிரி ஒரு சீரியல் எனக்கு அமைஞ்சிருக்காது. என்னோட டிரெஸ்ஸிங், வசனம், பிடிவாதம் எல்லாமே ஒரு பிரின்சிபிள்குள்ள இருக்கும். என்னை மையப்படுத்தித்தான் கதையே நகரும். ஒரு மரியாதை ராமனாத்தான் சீரியல் வழியே இந்த பிரியா ராமன் வெளிப்படுறேன்னு நினைக்கிறேன். அந்த நம்பிக்கைக்குப் பாலமா ஜீ தமிழ் சேனல் என் மீது வைத்த எதிர்பார்ப்பில் இப்போ ஒரு கேம் ஷோவும் வந்தாச்சு. ரோபோ சங்கர் குடும்பம், பவர் ஸ்டார், நமீதா ஃபேமிலின்னு எனக்குப் பரிட்சயமான நண்பர்கள் கலந்துக்குறாங்க. அடுத்தடுத்து என்னோட ‘செம்பருத்தி’ ஃபேமிலி, டெல்லி கணேஷ் சார் என நட்சத்திர பட்டாளங்களின் நிகழ்ச்சிகளும் இருக்கு. ‘எப்பப் பார்த்தாலும் மம்மிக்கு சீரியல் தானா?’ன்னு கேட்கும் யூத்ஸையும் இந்த நிகழ்ச்சிக்குள்ள கொண்டு வந்துட்டோம். என்னோட லைஃப்ல இது சந்தோஷமான காலகட்டம்னுதான் சொல்லணும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE