பளிச் நிறம், பால்வடியும் முகம், குறும்புப் பார்வை கொண்ட ராஷி கண்ணாவைப் பார்த்ததும், தமன்னாவின் தங்கையா, ஹன்சிகாவின் குளோனிங்கா என்று கேட்கத் தோன்றும். ஆனால், வாயாடிப் பொண்ணு. இந்தியில் அறிமுகமாகி, தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வருபவரின் கவனம் இப்போது தமிழ் மீது. ‘இமைக்கா நொடிகள்’, ‘சைத்தான் கே பட்சா’, ‘அடங்கமறு’ மற்றும் விஷால் நடிக்கவுள்ள புதிய படம் என்று பிஸியாக இருக்கும் ராஷி, ‘காமதேனு’ இதழுக்கு அளித்த பேட்டி இது.
2014-லேயே தெலுங்குக்கு வந்துட்டீங்க. பக்கத்துல இருக்கிற தமிழ்நாட்டுக்கு வர ஏன் இவ்வளவு லேட்?
கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கணும்தான். எப்படியோ தாமதமாகிடுச்சி. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கேன்ல... தெலுங்கோடு ஒப்பிட்டால், இங்கே வித்தியாசமான முயற்சிகள் நிறைய நடக்குது. இனி அதில் என்னோட பங்களிப்பும் இருக்கும்.
முதல் படமான ‘இமைக்கா நொடிகள்’ல நயன்தாரா இருக்காங்க. அதில், உங்களுக்கு எப்படி முக்கியத்துவம் இருக்கும்?