விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் சீசன் 6- க்கான க்ளைமாக்ஸ் ஃபீவர் எகிறிக்கொண்டிருக்கிறது. டைட்டில் வெற்றியாளரைத் தேர்வு செய்யும் பரபரப்புக்கு இடையே யுடியூப் வழியே ‘மை பர்ஸ்ட் இண்டிபென்டென்ட் சாங்’ என்ற பதிவோடு ‘யாவும் எனதே’ என்ற பாடலை ரிலீஸ் செய்து லைக்ஸ்களை அள்ளி வருகிறார் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கான நடுவர்களில் ஒருவரான ஸ்வேதா மோகன். ‘காலா’ படத்தின் ‘கண்ணம்மா… கண்ணம்மா’ ஹிந்தி, தெலுங்கு வெர்ஷன் பாடல் குரலுக்காக இன்னமும் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஸ்வேதாவுடன்தான் இந்த வார சின்னத்திரை பேட்டி!
ஸ்வேதாவுக்குத் திடீரெனத் தனிப்பாடல் ரிலீஸ் செய்யும் ஆசை வந்ததிருக்கிறதே?
பெரிதாக அறிமுகம்கூட தேவையில்ல. எல்லோரையும் ஈர்ப்பதுபோல் ஒரு விஷயம் செய்தால் போதும். இப்படிச் சாதிக்கிறவங்கள யூடியூப் சேனல் வேற லெவலுக்குக் கொண்டு வந்துடுது. திறமையாளர்களுக்கு ஒரு பெரிய ப்ளாட்ஃபார்ம்னே சொல்லலாம். அதுல, ஜாலியா நமக்குப் பிடிச்ச ஒரு விஷயத்தைச் செய்யலாமேன்னு தொட்டதுதான் இந்தப் பாட்டு. நல்ல டீம் அமைந்ததால் பாராட்டுக் குவியுது.
கவுதம் வாசுதேவ் மேனன், அனிருத் – விக்னேஷ் சிவன் கூட்டணி மாதிரி உங்களிடம் தொடர்ந்து இதுமாதிரியான பாடல்களை எதிர்பார்க்கலாமா?