உலகத்துக்கே ஆன்மிகம் தேவை: ரஜினி

By KU BUREAU

நடிகர் ரஜினிகாந்த், ஞானவேல் இயக்கும் 'வேட்டையன்' படத்தில் நடித்து வந்தார். இதில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சுவாரியர் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதையடுத்து ஓய்வுக்காக அபுதாபி சென்றார். ஐக்கிய அரபு அமீரக அரசு, அவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. அங்குள்ள இந்து கோயிலுக்கும் ரஜினிகாந்த் சென்றார். 2 வார கால ஓய்வுக்குப் பிறகு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.

ஒவ்வொரு வருடமும், தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ரஜினிகாந்த், கரோனா காரண
மாக 2 வருடம் அங்கு செல்லாமல் இருந்தார். கடந்த வருடம் சென்றார். பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்ற அவர், அங்கு வழிபட்டார். இந்த வருடமும் அவர் இமயமலை செல்ல இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று அவர் இமயமலை சென்றார். முன்னதாக அவர் அளித்த பேட்டியில், ‘ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன். ஒவ்வொரு முறையும் புதுஅனுபவம் கிடைக்கிறது. இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத்துக்கே ஆன்மிகம் தேவை” என்றார்.

விமானம் மூலம் டேராடூன் சென்ற ரஜினிகாந்த் அங்கிருந்து பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களுக்குச் சென்று வழிபட இருக்கிறார். அடுத்த மாதம் 3 அல்லது 4-ம் தேதி அவர் சென்னை திரும்புகிறார். பின்னர், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE