“நானும் மதுரைக்காரப் பொண்ணுதான்யா..!”
`‘ `டிக்:டிக்:டிக்’ படத்தில் கயிறுகட்டிக் தொங்கிக்கொண்டு தைரியமா நடிச்சிருக்கீங்களே...?'' என்று கேட்டதற்குத்தான் நிவேதா பெத்துராஜ் இப்படி கெத்தாகப் பதில் சொன்னார். ‘காமதேனு’ இதழுக்காக அவரிடம் உரையாடியதிலிருந்து...
நீங்கள் ஃபிட்னஸ் பயிற்சியளிப்பதில் கில்லி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுதான் இந்தத் தைரியத்துக்குக் காரணமா?
கராத்தே, மல்யுத்தம், குத்துச்சண்டை மீது எனக்கு ஆர்வம் அதிகம். தற்காப்புக் கலையைக் கற்றால் உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் வலுவாக இருப்போம் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். ‘டிக்:டிக்:டிக்’ படத்தில் நிறைய ‘ரோப்’ காட்சிகள் இருந்தன. அதில்பயமே இல்லாமல் நடிக்க இந்தப் பயிற்சிகளும் ஒரு காரணம். முழுக்கக்கிராஃபிக்ஸ் என்பதால், இந்தக்காட்சி படத்தில் இப்படி வெளிவரும் என்பதை இயக்குநர் சொல்லிக்கொண்டே இருந்தார். இருந்தாலும், எப்படி இக்காட்சிகள் திரையில் வரும் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாததால், கற்பனையிலேயே நடிச்சேன். இப்போது படத்தில் பார்க்கும்போது, ஆச்சரியமாக இருந்தது. கூடவே, நிறைய இடங்களில் இன்னும் நல்லா பண்ணியிருக்கலாமோன்னும் தோணுச்சு.