ரஹ்மான் இசையில் விஜய் குரல்!!

By காமதேனு

தேவா, இளையராஜா, சிற்பி, வித்யா சாகர், யுவன் சங்கர் ராஜா என்று பலரது இசையில் பாடியுள்ள நடிகர் விஜய், இதுவரை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியதேயில்லை. ‘மெர்சல்’ படத்தில் அதற்கான முயற்சி நடைபெற்றது. ஆனால், கைகூடவில்லை. தற்போது ‘தளபதி 62’ படத்தில் அதை நிறை வேற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் விஜய்யிடம் பேசியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். “அப்புறம் பார்க்கலாம் தலைவா” என்று விஜய் நழுவிட, ஏ.ஆர்.ரஹ்மானை வைத்துப் பேசப் போகிறார்களாம்.

இந்தப் பாடலைப் பாடுபவர் உங்கள் விஜய்னு போடுவீங்களா..?!

ஏற்கெனவே 2 இந்திப் படங்களில் நடித்திருக்கும் தனுஷ், அடுத்ததாக இன்னொரு படத்திலும் நடிக்கப் போகிறார். ‘ராஞ்ஜனா’ படத்தின் மூலம் இவரை இந்திக்கு அறிமுகப்படுத்திய அதே ஆனந்த் எல்.ராய் தான் புதிய படத்தின் இயக்குநர். ஆனந்த் எல்.ராயின் ‘கலர் யெல்லோ புரொடக்  ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து 2 இந்திப் படங்களைத் தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறார் தனுஷ்.

இந்தியிலும் கலக்குங்க தனுஷ்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE