’அன்பு’ தொல்லையா…? சங்கடத்தில் தவிக்கும் சசிகுமார்!

By காமதேனு

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ‘என் தலைவன் படம் இன்னைக்கு ரிலீஸ்’ என்று கொண்டாடுவது ரசிகனின் மனநிலை. ‘படத்துக்காக அடகு வைத்த சொத்து மீளுமா?’ என்று தவித்துக்கொண்டிருப்பது தயாரிப்பாளரின் மனநிலை. ‘கொடுத்த பணத்தை எப்படி வசூலிக்கலாம்...’ என்பது ஃபைனான்சியரின் மனநிலை. குறிப்பாக இன்றைய தேதியில் தமிழ்த் திரையுலகம் முழுக்க முழுக்க ஃபைனான்சியர்களை மட்டுமே நம்பி இயங்குகிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாகியிருக்கிறது சசிக்குமார் - அன்புச்செழியன் விவகாரம்!

சசிகுமாரின் உறவினரான அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டபோது, தற்கொலைக்குத் தூண்டியதாக ஃபைனான்சியர் அன்புச்செழியன் மீது வழக்குப் பதியப்பட்டது. தன்னைக் கைது செய்ய நீதிமன்றத்தில் தடை வாங்கினார் அன்புச் செழியன். அந்தத் தடையை நீக்கி அன்புச்செழியனை விசாரிக்க வேண்டும் என்று சசிகுமார் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. ஆனாலும், பிரச்சினை இன்னும் ஓயவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு நடுவிலும் கடும் கெடுபிடிகளைத் தாண்டியே சசிகுமாரின் ‘கொடிவீரன்’ ரிலீஸானது.

தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘அசுரவதம்’ படத்துக்கு அறிவிக்கப்படாத ‘ரெட்’ போடப்பட்டிருக்கிறது. ‘ரெட்’ என்றால் யாரும் அப்படத்தை வெளியிடக் கூடாது என்று அர்த்தம். ‘அசுரவதம்’ மட்டுமல்ல, சசிகுமார் நடித்துவரும் ‘நாடோடிகள் 2’, நடிக்கவுள்ள ‘சுந்தர பாண்டியன் 2’ ஆகிய படங்களுமே சிக்கலில் இருக்கின்றன. தொலைபேசியில் ‘அன்பு’ கட்டளைகள் வருவதால், சசியை வைத்து படமெடுப்பவர்கள் மிரள்கிறார்கள். அசோக்குமார் தற்கொலையின்போது, ‘இதைச் சும்மா விடமாட்டோம்’ என்று ஆக்ரோஷமாகப் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலே இப்போது ஃபைனான்சியர்களிடம் சிக்கியிருப்பதால் அடக்கி வாசிக்கிறார் என்கிறார்கள்.

சசிகுமார் தரப்பு சொல்வது இதுதான்...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE