இரண்டாம் புலிகேசி பராக்... பராக்...

By காமதேனு

அஜித், விஜய், மகேஷ்பாபு, ராம்சரண் என முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடித்து வந்த காஜல் அகர்வால், தெலுங்கில் இளைய நடிகர் சர்வானந்த்துடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். “கால மாற்றத்துக்குத் தகுந்தாற்போல் மாறிக்கொள்ள வேண்டியதுதான். படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் மட்டுமல்ல; வருங்காலத்தில் அறிமுக நாயகர்களுடன்கூட நடிப்பேன்” என்கிறார் காஜல்.

புதுமுகங்களே கேட்டுக்கோங்க...

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் எடிட்டிங் பணிகளை முழுமையாக முடித்துவிட்டார் தியாகராஜன் குமாரராஜா. தற்போது அதில் சமந்தா சம்பந்தப்பட்ட சில காட்சிகள் சேர்க்க வேண்டியதிருப்பதால், ஜூன் முதல் வாரத்தில் அதற்கான படப்பிடிப்பு நடைபெற வுள்ளது. அக்காட்சிகளையும் எடிட் செய்து இணைத்து, இறுதிக்கட்ட பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டு இருக்கிறார் தியாகு!

சமர்த்தா செஞ்சிடுங்க சார்...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE