தியா

By காமதேனு

*`கரு' என்ற பெயரில் துவங்கி, `தியா'வாக வெளியாகியுள்ள படம். `கருவில் வளரும் குழந்தையைக் கலைக்கும் உரிமை யாருக்கும் இல்லை!’ என்கிற கருத்தை, திகிலோடு சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் விஜய்.

*கல்லூரிக் காலத்தில் நாக ஷவுரியாவுடன் பூக்கும் காதல் எல்லை கடக்க... கருவுறுகிறார் சாய் பல்லவி. காதலர்களை சேர்த்து வைக்க முன்வரும் பெற்றோர், இருவரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கருவைக் கலைத்துவிட முடிவெடுக்கின்றனர். நாக ஷவுரியா உடன்படுகிறார். சாய் பல்லவி மறுப்பையும் மீறி கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்படுகிறது. கலைக்கப்பட்ட அந்தக் கருவின் கோபம்தான் கதை.

*`ப்ரேமம்’ மலையாளப் படத்தின் வாயிலாக ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த சாய்பல்லவி, `தியா' மூலம் தமிழில் நுழைந்திருக்கிறார். மொத்த திரைப்படத்தையும் தன் இயல்பான அழகாலும் நடிப்பாலும் அவரே தாங்கிப் பிடிக்கிறார். கருவில் கலையாமல் பெண்ணாகப் பிறந்திருந்தால், தற்போது அந்தக் குழந்தை எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு வயதிலும் முகமில்லாத ஓவியமாக வரைந்து உருகுகிறார். பிறகு அந்தக் ‘குழந்தை’யிடமிருந்து கணவனைக் காக்கப் போராடி உருக வைக்கிறார்.

*நாயகன் நாக ஷவுரியாவுக்குப் பெரிதாக வேலை இல்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE