``இமான் இசையில் பாடப்போறேன்”- ‘சரிகமப’ டைட்டில் வின்னர் வர்ஷாவின் குதூகலம்!

By காமதேனு

‘‘அடிச்சு சொல்றோம்.. டைட்டில் வின்னர் ரமணியம்மா பாட்டிதான்!’னு ஊரே பந்தயம் கட்டிக்கொண்டிருந்த நேரத்தில் ஜீ தமிழ் சேனல் ‘சரிகமப’  இசை நிகழ்ச்சியின் ‘தங்க மகள்’ பட்டத்தோடு டைட்டில் வின்னராகி இருக்கிறார், வர்ஷா   கிருஷ்ணன். 

‘‘நானே ரமணியம்மா பாட்டியோட ரசிகை. இதை நானே மேடைக்கு மேடை சொல்லியிருக்கேன். எப்பவுமே எங்களுக்குள்ள போட்டியே இருந்ததில்லை. என்னோட சொந்த பாட்டி மாதிரிதான் அவங்க. லைஃபுக்கு அவ்ளோ டிப்ஸ் கொடுப்பாங்க. அவங்களுக்கு ரெண்டாவது பரிசோட ராக் ஸ்டார் பட்டமும் கிடைச்சிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். தங்க மகள், டைட்டில் வின்னர்னு ஏகப்பட்ட பாராட்டுங்க.

இந்த நிகழ்ச்சியில பெரும்பாலும் இளையராஜா சார் இசையில சித்ராம்மா பாடின பாட்டுங்கதான் தேர்வு செய்து பாடினேன். சீக்கிரமே இமான் சார் இசையில பாடப்போறேன்.  ஜூன் மாதம் ஜீ தமிழ் சேனல் ஆஸ்திரேலியாவுல நடத்தும் நிகழ்ச்சிக்கும் போறேன். லைஃப் ரொம்பவே ஹேப்பி’’ன்னு குதூகலமாகும் வர்ஷா, இந்த வெற்றிக்குப் பின்னணியில் இருக்கும் குடும்பத்தையும் நினைவுகூர்கிறார்.

‘‘என்னோட இசை ஆர்வத்துக்காக அப்பா திருவனந்தபுரம்ல பார்த்த வேலையை டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு சென்னைக்கு வந்துட்டாங்க. இப்போ  இங்கே எம்சிசி காலேஜ்ல விஷுவல் கம்யூனிகேஷன் ஃபர்ஸ்ட் இயர் போறேன். அண்ணா, அம்மா  கேரளாவுல இருக்காங்க. இசையில நிறைய சாதிக்கணும். பெரிய பாடகியா வலம் வரணும். அதுதான் ஆசை. எனக்குக் துணையா இருக்குற பேரண்ட்ஸாலதான் இதெல்லாமும் சாத்தியம்’’ என்கிறார் வர்ஷா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE