எனக்கு ’தூள்’ பிடிக்கும்- பரத்வாஜ் ரங்கன் பேட்டி

By காமதேனு

சினிமாக்காரர்களும் விமர்சகர்களும்கூட தேடிப் படிக்கும் திரை விமர்சகர் பரத்வாஜ் ரங்கன். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் மூலம் பெரும் வாசகர் கூட்டத்தைச் சென்றடைந்தவர். இப்போது ‘ஃபிலிம் கம்பெனி’ இணையதளத்தில் எழுதிக் கொண்டிருப்பவரை ஒரு மதிய உணவு இடைவேளையில் சந்தித்தேன்.

எப்படி, எப்போது எழுத வந்தீர்கள்?

எழுத்து - சினிமா இரண்டிலுமே ஆர்வம் உண்டு. சினிமா விமர்சனம் இந்த இரண்டையும் சேர்த்துவைத்தது. 2003-ல் பொழுதுபோக்காக எழுதத் தொடங்கினேன். நண்பர்களுக்கு மின்னஞ்சல் வழியே அனுப்புவேன். அப்புறம் ப்ளாக். இப்படித்தான் தொடங்கியது இந்த விளையாட்டு.

சினிமா விமர்சனம் எழுதக் கற்றுக்கொள்வது என்பதே மிகப் பெரிய வேலை ஆயிற்றே?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE