‘குலதெய்வம்’ நேரத்தில் இனி ‘கல்யாண வீடு’ கொண்டாட்டம்- திருமுருகன் மகிழ்ச்சி பேட்டி

By காமதேனு

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘குலதெய்வம்’ சீரியல்897வது அத்தியாயத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவுற்றது. அந்த நேரத்துக்கு இந்த வாரம் ‘கல்யாண வீடு’ புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் சின்னத்திரைக்குள் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என மும்முகம் காட்ட வருகிறார் இயக்குநர் திருமுருகன்.

மெட்டி ஒலி’, ‘நாதஸ்வரம்என சின்னத்திரை சீரியல்களை இயக்கி நடித்துவந்த திருமுருகன், திடீரென அதிலிருந்து விலகி திரைக்கதை, தயாரிப்பு என்று ரூட் மாறியது ஏன்?

எதுவாக இருந்தாலும் முதலில் நம்மை அதுக்கு தயார்படுத்திக்கணும்னு நினைக்கிற ஆள் நான். ‘மெட்டி ஒலி’ தொடரில் நடிச்சுட்டு 5 வருசத்துக்கு அப்பறம்தான் ‘நாதஸ்வரம்’ தொடருக்கு வந்தேன். இப்போ 3 வருசத்துக்கு பிறகுதான் திரும்ப ‘கல்யாண வீடு’ சீரியலுக்குள்ள வர்றேன். ‘குலதெய்வம்’ சீரியலில் தயாரிப்பாளர், ஸ்டோரி ரைட்டர் இந்த ரெண்டு பொறுப்பையும் நான் கவனிச்சேன். நண்பர் அசோகன் ஒரு வருசமும், நண்பர் பழனிவேல் 2 வருசமும் அந்தத் தொடரை இயக்கினாங்க. எப்பவுமே, சின்னதா ஒரு இடைவெளி விட்டுத் திரும்ப வரலாமேன்னு மனசு சொல்லும். அதன்படிதான் நான் நடக்கிறேன்.

கல்யாண வீடுதொடர் என்ன மாதிரியான கதை?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE