‘ரங்கஸ்தலம்’ படத்தில் ராம்சரணுடன் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார் சமந்தா. படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ‘திருமணமான பின்பு எப்படி முத்தக்காட்சிக்கு ஒப்புக் கொண்டீர்கள்?’ என்று கேட்க “திருமணமான நடிகர்கள் முத்தக்காட்சியில் நடித்தால் யாரும் கேட்பதில்லை. அதுவே, ஒரு நடிகையாக இருந்தால் ஏதேதோ கேள்வி கேட்கிறீர்கள்” என்று சீறிவிட்டார் சமந்தா. கூடவே, “உண்மையில், ராம்சரணின் கன்னத்தில் தான் முத்தமிட்டேன். அதை லிப்-லாக் முத்தமாக கேமரா ட்ரிக்ஸில் காட்டியிருக்கிறார்கள்” என்ற உண்மையையும் போட்டு உடைத்துவிட்டார் அம்மணி.
இனிமேட்டு, ஒரிஜினல் ‘லிப்-லாக்’கில் நடிப்பீங்களான்னு கேட்பாங்களேம்மா?
ஜப்பானிலும் ‘பாகுபலி 2’ சக்கைபோடு போட்டிருக்கிறது. 100 நாட்கள் ஓடி, 1.3 மில்லியன் டாலர்களை வசூலித்து, ஜப்பானில் அதிக வசூல் செய்த இந்தியப் படங்கள் வரிசையில் 3-ம் இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த லிஸ்ட்டில் இப்போதும் நம்பர் ஒன் இடத்திலிருப்பது ரஜினி நடித்த ‘முத்து’ (டேன்சிங் மகாராஜா) தான். அது 180 நாட்கள் ஓடி, 1.6 மில்லியன் டாலர்களை வசூலித்தது. 1.48 மில்லியன் டாலர்கள் வசூலித்த அமீர்கானின் ‘3 இடியட்ஸ்’ திரைப்படம் இரண்டாவது இடத்த்தில் இருக்கிறது.
‘பாகுபலி'க்கு ஜப்பான்ல என்ன பேர் வெச்சிருப்பாங்கோ?