நிஜம் பாதி நீரஜா மீதி: கனவு தேவதைகளின் காஸ்ட்யூம் கடவுள்

By காமதேனு

சமந்தா மீது கிறுக்குப் பிடித்தவர் போல ‘ராக்கு.. ராக்கு... கிராக்கு... கிராக்கு’ என்று பாடிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து செல்வார் டோலிவுட்டின் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண். ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘அத்தாரிண்டிகி தாரேதி’ என்ற தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற அந்த ஒரு பாடலில் மட்டுமல்ல, படத்தின் அத்தனை பாடல்களிலும் சமந்தா அணிந்த ஆடைகளின் மீது ரசிகர்களுக்கும் கிறுக்குப் பிடிக்க வைத்தவர் ஆடை வடிவமைப்பாளர் நீரஜா கோனா.

அந்த அளவுக்கு சமந்தாவுக்காக இவர் வடிமைக்கும் ஒவ்வொரு காஸ்டியூமிலும் இதுவரை கண்டிராத நவீனம், ப்ரியா வாரியாரைப் போலக் கண்சிமிட்டி ஈர்க்கும். நட்சத்திரங்களின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் காத்திருந்தால் நட்சத்திரங்கள் நீரஜா கோனாவின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார்கள். இத்தனை பிஸிக்கு மத்தியிலும் காமதேனுவுக்காக நீரஜா அளித்த பேட்டி.

எப்படி ஆடை வடிமைப்பாளரானீர்கள்?

வழக்கமான பதிலாக இருக்கிறதே என்று சிரிக்கக்கூடாது. ஸ்டைலிங், டிசைனிங் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்தவை என்று உணரத் தொடங்கியதே ஒரு விபத்து தான். இதுதான் எனக்கான துறை என்று அறிந்தவுடன், அதில் நிபுணத்துவம் பெறவிரும்பினேன். லாஸ் ஏஞ்சலீஸில் ஃபேஷன் மெர்கண்டைஸிங், லண்டனில் விஷுவல் மெர்க்கண்டைஸிங் படித்து இந்தியாவுக்கு வந்ததும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கிவிட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE