சினி பிட்ஸ்: ஓவியா ஆர்மி, பீ கேர்ஃபுல்!

By காமதேனு

பிக் பாஸ்' நிகழ்ச்சி கமலுக்குப் பலன் கொடுத்ததோ இல்லையோ... ஓவியாவை செம பிரபலமாக்கிவிட்டது. ஏராளமான விளம்பரப் படங்களைத் தொடர்ந்து, ‘காஞ்சனா 3' மற்றும் ‘90 ml' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ஓவியா. இதில் ‘90 ml' 'சிநேகிதியே' படப் பாணியில் முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்கும் படம். இசை சிம்பு!

ஓவியா ஆர்மி, பீ கேர்ஃபுல்!

‘துப்பறிவாளன்' படத்தில் பாக்யராஜை இயக்கிய மிஷ்கின், தனது அடுத்த படத்தில் அவருடைய மகன் சாந்தனுவை நாயகனாக்கி இருக்கிறார். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம். நாயகியாக நடிக்க சாய்பல்லவி மற்றும் நித்யா மேனன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.

யார் நடிச்சாலும் காலுக்குத்தானே ‘க்ளோஸ்-அப்’ ஷாட்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE