‘லேடி சூப்பர் ஸ்டார்’னா சும்மாவா?!

By காமதேனு

நயன்தாராவின் அடுத்த படம் ‘கோலமாவு கோகிலா’. சுருக்கமாக கோகோ. இயக்கம் நெல்சன். ஒரு சாமானிய பெண், தனக்கு ஏற்படும் பிரச்சினைகளை எப்படி துணிச்சலாக எதிர்கொண்டு ஜெயிக்கிறாள் என்பதே கதை. பாவாடை தாவணியணிந்த பாந்தமான கதாபாத்திரம் என்றாலும், சின்னச் சின்ன சண்டைக்காட்சிகளும் உண்டாம்!

‘பண்ணையாரும் பத்மினி’யும், ‘சேதுபதி’ படங்களின் இயக்குநர் அருண்குமார் அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். அவரிடம் கதை கேட்கச் சொல்லி பல்வேறு நடிகர்களிடம் விஜய் சேதுபதி சிபாரிசு செய்ய, “படத்தில், கதாநாயகனுக்கு முக்கியத்துவமே இல்லையே?” என்று அத்தனை பேரும் நழுவிவிட்டார்கள். கடைசியில், “கவலைப்படாத. நானே நடிக்கிறேன்” என்று சொல்லிவிட்டார் விஜய் சேதுபதி!

நான் யாரு... நான் யாரு... கொய்யால...நான் யாரு?!

ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் படத்தின் ‘போட்டோ செஷன்’ நடந்தபோதே, போட்டோக்களும், வீடியோக்களும் வெளியாகின. அதிர்ச்சியடைந்த படக்குழு, லைட்மேன் ஒருவருடன் வந்த நண்பரைக் கையும் களவுமாகப் பிடித்தது. கெஞ்சிக்கூத்தாடிய அவரை மன்னித்துவிட்டார்கள். விஷயம் அதுவல்ல. இப்போது படப்பிடிப்புக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள். அடையாள அட்டையில்லாமல் படப்பிடிப்பு நடக்கிற ஏரியாவை நெருங்கக்கூட முடியாதாம். செல்போனுக்கும் 144.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE