பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (பிப்.20, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
ரிஷபம்: அடுக்கடுக்காக இருந்து வந்த செலவுகள் இனி குறையும்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.
கடகம்: சோர்வு நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
சிம்மம்: புதியவர்கள் அறிமுகமாவர். வர வேண்டிய பணம் வரும்.
கன்னி: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவர்.
துலாம்: உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.
விருச்சிகம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு.
தனுசு: குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்.
மகரம்: உறவினர், நண்பர்களால் ஆதாயமுண்டு.
கும்பம்: எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் வரும்.
மீனம்: தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)