பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன. 20, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: வெகு நாட்களாக மனதில் இருந்த பிரச்சினை களுக்கு முடிவு கட்டுவீர்கள்.
ரிஷபம்: எதார்த்தமாக பேசி அனைவரையும் கவருவீர்கள்.
மிதுனம்: உற்சாகம், தோற்றப் பொலிவு, ஆளுமை திறன் அதிகரிக்கும்.
» டெல்லி கண்காட்சியில் 2 நாளில் 90 வாகனம் அறிமுகம்
» யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர்: ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்பு
கடகம்: வெளிநாட்டில் இருப்பவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால் திருப்பம் உண்டாகும்.
சிம்மம்: தேவையற்ற குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும்.
கன்னி: எடுத்த காரியத்தை முடிப்பதற்குள் அலைச்சல், அசதி அதிகரிக்கும்.
துலாம்: பழைய கசப்பான சம்பவங்கள் பற்றி யாரிடமும் பேச வேண்டாம்.
விருச்சிகம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
தனுசு: கடந்தகால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள்.
மகரம்: பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள்.
கும்பம்: கணவன் - மனைவிக்குள் நிம்மதி கிடைக்கும்.
மீனம்: தேவையற்ற அச்சம், கவலை, மன குழப்பம் மறையும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)