மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஜன. 02, 2025

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன. 02, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

ரிஷபம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவிவழியில் மதிப்பு கூடும்.

மிதுனம்: நல்ல வாய்ப்புகளை தவறவிட்டு விட்டோமே என்று ஆதங் கப்படுவீர்கள்.

கடகம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்பத்தினரால் நிம்மதி கிட்டும்.

கன்னி: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

துலாம்: கடந்த கால சுகமான அனுபவங்களை நினைத்து மகிழ்வீர்.

விருச்சிகம்: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.

தனுசு: முகப்பொலிவு கூடும். தம்பதிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும்.

மகரம்: நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

கும்பம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள்.

மீனம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும். செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE