பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (டிச.29, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: தடைபட்ட வேலையை, உங்கள் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள்.
ரிஷபம்: திடீர் பயணம், அலைச்சல், அசதி, எதிர்பாராத செலவுகள் வரக்கூடும்.
மிதுனம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வகையில் மனநிம்மதி கிடைக்கும்.
» மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு பற்றி சர்ச்சையை உருவாக்கும் காங்கிரஸ்
» மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 10 வயது சிறுவன் உயிரிழப்பு
கடகம்: உங்களது நட்பு வட்டம் விரிவடையும். பழைய வாகனத்தை மாற்றி, புதிதாக வாங்குவீர்கள்.
சிம்மம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.
கன்னி: பழுதான டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள்.
துலாம்: எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.
விருச்சிகம்: சொந்த பந்தங்கள் வருகையால் வீடு களைகட்டும்.
தனுசு: எதிர்பார்த்த உதவிகள், வாய்ப்புகள் சற்று தடைபடும். பேச்சில் நிதானம் தேவை.
மகரம்: எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்ப்பீர்கள்.
கும்பம்: வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.
மீனம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)