பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (டிச.20, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி அன்யோன்யம் ஏற்படும்.
ரிஷபம்: நினைத்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும்.
மிதுனம்: மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்: குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். அடிப்படை வசதிகள் பெருகும்.
சிம்மம்: உடல்சோர்வு, அலைச்சல் வந்து போகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது.
கன்னி: தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும். ஓரளவு பணவரவு உண்டு.
துலாம்: எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும்.
விருச்சிகம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள்.
தனுசு: இங்கிதமாகபேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள்.
மகரம்: காரியத்தடைகள், அலைச்சல் ஏற்படும். குடும்பத்தினரால் கையிருப்புகள் கரையக் கூடும்.
கும்பம்: கடந்தகால இனிய சம்பவங்களை அவ்வப் போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.
மீனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அழகு, இளமை கூடும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)