பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (டிச.13, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: எடுத்த வேலைகள் தடைபட்டு முடியும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகவும்.
ரிஷபம்: பலமுறை அலைந்து வேலைகளை முடிக்க நெரிடும். தந்தையின் உடல்நிலை சீராகும்.
மிதுனம்: மன தைரியம் பிறக்கும். வருங்காலம் பற்றிய பயம் விலகும்.
» சிரியாவில் மீட்கப்பட்ட இந்தியர் மத்திய அரசுக்கு நன்றி
» சத்தீஸ்கரின் அபுஜ்மத் வனப்பகுதி என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட்கள் உயிரிழப்பு
கடகம்: எதிர்மறை எண்ணம் நீங்கும். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்.
சிம்மம்: குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டு.
கன்னி: பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். ஓரளவு பணவரவு உண்டு.
துலாம்: சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எடுத்த வேலையை முடிக்க போராடுவீர்.
விருச்சிகம்: கைமாற்றாக கேட்ட பணம் கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் தீரும்.
தனுசு: உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் வந்துசேரும்.
மகரம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும்.
கும்பம்: மறைமுக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்.
மீனம்: பிரபலங்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)