மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.27, 2024

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.27, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: புது திட்டங்களை தீட்டுவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவர்.

ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மிதுனம்: பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பூர்வீக சொத்து பிரச்சினை தீரும்.

கடகம்: வீட்டில் விலையுயர்ந்த அலங்காரப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவீர்கள்.

சிம்மம்: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை.

கன்னி: இங்கிதமாகப் பேசி சுற்றியிருப்பவர்களை கவருவீர் பிரபலங்களால் ஆதாயமுண்டு.

துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல் விலகும்.

விருச்சிகம்: தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.

தனுசு: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர். எடுத்த வேலைகளை விரைந்து முடிப்பீர்.

மகரம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தருவதை தவிர்க்கவும்.

கும்பம்: எதிர்பார்த்தபடி சிலவேலைகளை முடிப்பீர். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்.

மீனம்: சொந்த ஊரிலிருந்து நற்செய்திகள் வரும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE