மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.18, 2024

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.18, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்பத்தில் வீண் விவாதம் வந்து போகும். வெளியூர் பயணம் அலைச்சல் தரும்.

ரிஷபம்: குடும்பத்தில் நிலவி வந்த விவாதம் மறையும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்.

மிதுனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

கடகம்: கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை தென்படும். புதியவர்கள் நண்பர்களாவர்.

சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

கன்னி: குழப்பங்கள், அலைச்சல் கூடும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். முடிவுகள் எடுக்கும்போது நிதானம் தேவை.

துலாம்: விருந்தினர் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

விருச்சிகம்: பழைய பிரச்சினைக்கு புது தீர்வு கிட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர்.

தனுசு: மனப் போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்.

மகரம்: மின்சார சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர்.

கும்பம்: தொட்டது துலங்கும். தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும்.

மீனம்: பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். புது எண்ணங்கள் மனதில் தோன்றும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE