மேஷம் அஸ்வினி: இந்த வாரம் மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். எந்த காரியத்தையும் ஆலோசித்து செய்வது நல்லது. ஆன்மீக போக்கு மனதிற்கு நிம்மதியைத் தரும். மேலிடத்தில் கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள்.
பரணி: இந்த வாரம் அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். இருந்து வந்த நீண்ட நாள் வேலைகளை முழுமூச்சுடன் முடிப்பீர்கள்.
பரிகாரம்: முருகனை வணங்க குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை தீரும். காரியவெற்றி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
» குமரி பகவதியம்மன் பரிவேட்டை: முதல் முறையாக யானையின்றி நடந்த ஊர்வலத்தால் பக்தர்கள் அதிருப்தி
» தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில்: புரட்டாசிப் பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலம்
ரிஷபம் கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடும் போது கவனத்துடன் இருப்பது நல்லது. வாழ்க்கை தரம் உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எல்லாவற்றிலும் மனகவலை ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை.
ரோகினி: இந்த வாரம் தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் கவனம் தேவை.
மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் கவனமாக இருப்பது லாபம் அதிகரிக்க செய்யும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும். | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
மிதுனம் மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
திருவாதிரை: இந்த வாரம் திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படலாம். ஆன்மீக நாட்டம் மனதிற்கு நிம்மதியைத் தரும். குல தெய்வ தலங்களுக்கு சென்று வருவது மனதிற்கு அமைதியைத் தரும். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் உங்கள் வியாபாரத்தை சீரமைப்பதற்கு சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும். காரிய அனுகூலம் உண்டாகும். சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். உடனிருப்பவருகள் உங்களுக்கு உதவுவார்கள். லாபம் அதிகரிக்கும். விற்பனை அமோகமாகும்.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும். | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்.
கடகம் புனர்பூசம் 4 ம் பாதம்: இந்த வாரம் சொந்தங்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பரிகள் மற்றும் அருகிலிருப்பவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றம் உண்டாகும். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப்பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும்.
பூசம்: இந்த வாரம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள். மன நிம்மதி கிடைக்கும்.
ஆயில்யம்: இந்த வாரம் உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது.
பரிகாரம்: அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று 11 முறை வலம் வந்து வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சனை தீரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
சிம்மம் மகம்: இந்த வாரம் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும்.
பூரம்: இந்த வாரம் ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைவீர்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும்.
பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று ஞாயிற்றுக்கிழமையில் வில்வ அர்ச்சனை செய்து வணங்க எல்லா தொல்லைகளும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் நன்றாக நடக்கும். | அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
கன்னி உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சரக்குகளை நல்ல விலைக்கு விற்பீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். புத்திர பாக்கியத்தை அடைவீர்கள். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த திருமணம் கைகூடும். பிரிந்து சென்ற பிள்ளைகள் வந்து சேர்வார்கள். இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய பதவிகளை அடைவார்கள்.
அஸ்தம்: இந்த வாரம் பொதுமக்கள் சேவையில் நல்ல பெயரையும் புகழையும் அடைவார்கள். உழைப்பதற்குண்டான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். தனியார் பணியில் இருப்பவர்கள் அதிகமான வேலைப் பளுவை சந்திப்பார்கள். பங்குதாரர்களிடம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். புதிதாக தொழில் தொடங்க போட்ட திட்டம் தள்ளிப்போகும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: இந்த வாரம் வீண் சச்சரவுகள் வர வாய்ப்புண்டு. வியாபாரிகள் அரசுக்குச் செலுத்தவேண்டிய வரி பாக்கிகளால் அரசாங்கத்தின் கெடுபிடியை சந்திப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து நடப்பார்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை.
பரிகாரம்: புதன்கிழமையில் அருகில் இருக்கும் காவல்தெய்வத்தை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.
துலாம்சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் திறமைகள் வெளிப்படும். எதிலும் எந்த இடத்திலும் நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக போராடுவீர்கள். நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள். அதிக சுமைகளை எடுத்துக் கொள்வீர்கள். அதேநேரம் சின்னச் சின்ன பிரச்னைகளில் தலையிட்டு வெளியில் வர தள்ளாடுவீர்கள்.
சுவாதி: இந்த வாரம் ஏற்ற இறக்கமாக பொருளாதாரத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக விலகும். புதிய தொழில்களில் கால் பதிக்க போராடிக் கொண்டிருந்தவர்கள் எதிர்பார்த்த மாற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களுடன் இருந்த பிரச்னைகள் தீர்வுக்கு வருவதால் அலுவலகச் சூழல்களில் இருந்த இறுக்கம் மறைந்து சகஜநிலை உருவாகும்.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் அரசுத்துறையிலிருந்து சலுகைகளை பெற குறுக்கு வழிகளை தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக் கொள்ளுங்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் புகழைத் தக்க வைத்துக் கொள்ள சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும்.
பரிகாரம்: கோபூஜை செய்து பசுவை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும். | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.
விருச்சிகம் விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் தொழிலில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். வேறு ஊருக்குச் சென்று தொழில் செய்யும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பதால் மறைமுகமான போட்டிகளால் பாதிப்புகள் ஏற்படாது. உடலில் ஏற்படும் சிறிய உபாதைகளுக்கு உடனுக்குடன் வைத்தியம் செய்து கொண்டால் மருத்துவச் செலவுகளை குறைக்கலாம்.
அனுஷம்: இந்த வாரம் பங்குச் சந்தை போன்ற விஷயங்களில் நல்ல பலன்களை பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுக்குத் தேவையான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவீர்கள். கவலைகொள்ள வைத்த கடன் தொல்லைகள் குறைவதால், உங்களின் மனதில் தைரியம் பிறக்கும்.
கேட்டை: இந்த வாரம் புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்கவும். பூர்வீகச் சொத்தில் இருந்த இழுபறியான நிலைமை மாறும். சகோதர, சகோதரிகளிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து குடும்ப ஒற்றுமையை பேணிக்காப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை பெறுவீர்கள்.
பரிகாரம்: ஆறுமுகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும். | அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
தனுசு மூலம்: இந்த வாரம் உங்கள் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே குறித்த காலத்திற்குள் முடிவடையும். உங்களின் வேலைகளில் தெளிந்த மனநிலையுடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவு நிலை உண்டாகும். சக ஊழியர்களின் குறைகளை முன்னின்று தீர்த்து வைப்பீர்கள்.
பூராடம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும்.
பரிகாரம்: குருபகவானை வியாழக்கிழமைகளில் வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும். | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.
மகரம் உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும்.
திருவோணம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெற்றிலை மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும். | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்.
கும்பம் அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் வீண் செலவை உண்டாகும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.
சதயம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சினை தீரும்.
மீனம் பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் தனலாபம் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.
உத்திரட்டாதி: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். வார இறுதியில் பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.
ரேவதி: இந்த வாரம் குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.
பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. |