மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.14, 2024

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.14, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் வரும். குடும் பத்தினரின் ஆசைகள், விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்: மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி, முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

கடகம்: சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி: நெருங்கிய சொந்த பந்தங்களால் வீண் செலவுகள் வரும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும்.

துலாம்: எதிர்பாராத பண வரவால், பழைய கடனை பைசல் செய்வீர்கள்.

விருச்சிகம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்த அலைச்சல், அசதி விலகும்.

தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.

மகரம்: புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்: எந்த விஷயத்திலும் அவசர முடிவு எடுக்க வேண் டாம். வீண் செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.

மீனம்: வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப் பீர்கள். வங்கி கடனுதவிகள் கிடைக்கும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE