மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.11, 2024

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.11, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: மன தைரியம் பிறக்கும். வருங்காலம் பற்றிய பயம் விலகும். பணப் பிரச்சினையை சமாளிக்க வழி கிடைக்கும்.

ரிஷபம்: இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும்.

மிதுனம்: சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எடுத்த வேலையை முடிக்க போராடுவீர்கள்.

கடகம்: எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். வியாபாரத்தில் சரக்குகள் விற்று தீரும்.

சிம்மம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் சாதனைகளால் மதிப்பு உயரும்.

கன்னி: குடும்ப குழப்பங்களை எதிர்கொள்ள சக்தி கிடைக்கும். பணவரவு உண்டு.

துலாம்: கைமாற்றாக கேட்டிருந்த பணம் கிடைக்கும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்.

விருச்சிகம்: சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.

தனுசு: உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.

மகரம்: எடுத்த வேலைகளை முடிக்க முடியாமல் தடுமாறுவீர். கையிருப்பு கரையக் கூடும்.

கும்பம்: மறைமுகமாக செயல்பட்டவர்களை அறிந்து ஒதுக்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு ஆதரவு கூடும்.

மீனம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE