மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.08, 2024

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.08, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார்கள்.

ரிஷபம்: வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும்.

மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

கடகம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும்.

சிம்மம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். நீண்டநாள் விருப்பங்களை பூர்த்தி செய்துக் கொள்வீர்கள்.

கன்னி: புது கருத்துகளால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்.

துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும்.

விருச்சிகம்: எதிர்பாராத செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர் களின் பேச்சுக்கு மதிப்பளிப்பது நல்லது.

தனுசு: அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பர்.

மகரம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். தாயாரின் உடல்நிலை சீராகும்.

கும்பம்: குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள்.

மீனம்: இதமான பேச்சுகளால் சில காரியங்களை முடிப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE