மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.04, 2024

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.04, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவர்.

ரிஷபம்: இங்கிதமாக பேசி அனைவரையும் கவருவீர். தாயாரின் உடல்நலம் சீராகும்.

மிதுனம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்.

கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர். அறிஞர்களின் நட்பு கிட்டும்.

சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தனிப்பட்ட முறையில் முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்.

கன்னி: அடிமனதிலிருந்து வந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். பணவரவு உண்டு.

துலாம்: திட்டமிட்ட வேலைகளை போராடி முடிப்பீர். குடும்பத்தில் கருத்து மோதல் வரும்.

விருச்சிகம்: புது யோசனை தந்து சுற்றியிருப்பவர்களை அசத்துவீர்கள். பாதியில் நின்ற வேலைகள் முடியும்.

தனுசு: தெளிவு பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவர். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்.

மகரம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

கும்பம்: அடிமனதில் இருந்த போராட்டம் நீங்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள்.

மீனம்: உறவினர்கள், நண்பர்கள் வகையில் விரயச் செலவுகள் வரக் கூடும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE