மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.02, 2024

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.02, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும்.

ரிஷபம்: மகளின் திருமண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர்.

மிதுனம்: பிள்ளைகளின் சாதனைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.

கடகம்: மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர். தம்பதிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறையும்.

சிம்மம்: சகோதரர்களுடன் பேசி பூர்வீக சொத்துப் பிரச்சினைகளை தீர்க்க வழி பிறக்கும்.

கன்னி: குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து நடக்கவும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர்.

துலாம்: பால்ய நண்பர்கள் உதவுவர். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு புது வேலை அமையும்.

விருச்சிகம்: பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வர்

தனுசு: வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவர்.

மகரம்: குடும்பத்தில் எல்லாவற்றையும் பார்க்க வேண்டியிருக்கும். உறவினர்களால் ஆதாயமுண்டு.

கும்பம்: அலுவலகத்தில் சக ஊழியருடன் இணக்கமாக செயல்படவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசவும்.

மீனம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல் நலம் சீராகும். பழைய நண்பர்களை சந்திப்பீர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE