மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ செப்.14, 2024

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (செப்.14, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும்.

ரிஷபம்: மன வலிமையுடன் இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும்.

கடகம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவர்.

சிம்மம்: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள்.

கன்னி: வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு பெருகும்.

துலாம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்.

விருச்சிகம்: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள்.

தனுசு: குடும்பத்தார் விருப்பங்களை நிறைவேற்றுவீர். தாய்வழி உறவினர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும்.

மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றவும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள்.

கும்பம்: முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்.

மீனம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர்கள். பிரபலங்கள் உதவுவர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE