பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (செப்.10, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் வரும். சேமிப்புகள் கரையும்.
ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.
மிதுனம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர்.
» கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை
» அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு: பேரவை தலைவர் அப்பாவு செப்.13-ல் ஆஜராக உத்தரவு
கடகம்: தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்பு கள் அதிகரிக்கும்
சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள்.
கன்னி: அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்.
துலாம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்.
விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.
தனுசு: உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளை முடித்து மேலதிகாரியால் பாராட்டப்படுவீர்.
மகரம்: சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.
கும்பம்: அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும்.
மீனம்: ஒதுங்கியிருந்த உறவினர்கள், நண்பர்கள் இனி ஓடி வந்து பேசுவர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)