மேஷம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும்.
ரிஷபம்: சிக்கனமாக இருந்து சேமிக்கத் தொடங்குவீர். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
மிதுனம்: சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும்.
கடகம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர். தாயாருடன் இருந்த கருத்துமோதல் விலகும்.
» பாரிஸ் பாராலிம்பிக்ஸ்: உயரம் தாண்டுதலில் பிரவீன்குமார் முதலிடம்; இந்தியாவுக்கு 6-வது தங்கம்
சிம்மம்: அடுக்கடுக்காக இருந்து வந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் எடுத்து முடிப்பீர்.
கன்னி: வீட்டில் விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வர்.
துலாம்: தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். பிறர் மனது காயப்படும்படி பேசாதீர்.
விருச்சிகம்: நேர்மறை சிந்தனை மனதில் உற்சாகத்தை தரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்.
தனுசு: மனதுக்கு இதமான செய்திகள் வரும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.
மகரம்: குடும்பத்தாருடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர். பழைய கடனில் ஒரு பகுதி பைசலாகும்.
கும்பம்: தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு சில பிரச்சினைகளை முடிப்பீர்.
மீனம்: குடும்பத்தில் சின்னச் சின்ன குழப்பங்கள் வரும். கூட்டுத் தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் வரக் கூடும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)