சிம்மம் ராசியினருக்கான வார பலன்கள் @ மே 16 - 22 

By KU BUREAU

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் அன்பர்கள் இவ்வாரம் பிறருக்கு கடன் கொடுக்கவோ அல்லது ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். அதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். தாயார் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருந்தால் இப்போது சரியாகிவிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவார்கள்.

சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். தொழில்துறையினருக்கு சக பாகஸ்தர்களினால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது. விஸ்தரிப்பு திட்டங்களில் இந்த வாரம் இறங்க வேண்டாம்.

வியாபாரிகள் புதிய முயற்சிகள் எதிலும் இந்தவாரம் இறங்க வேண்டாம். பொறுமை அவசியம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். அதற்கு காரணம் வீட்டில் ஏற்படும் சண்டை சச்சரவுகளும் எதிர்பாராத ஏமாற்றங்களுமேயாகும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து விட முடியும்.

வாடகை வீட்டிலிருந்து வரும் அன்பர்கள் சிலர் இப்போது வேறு வீடு மாற வேண்டியிருக்கும். மாணவமணிகள் விடுமுறை நாட்களில் அதிகநேரம் வெயிலில் விளையாட வேண்டாம் பெண்மணிகள் கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: சிவாலயத்திற்கு சென்று நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, திங்கள்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE