மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ செப்.4, 2024

By KU BUREAU

மேஷம்: உத்தியோகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். வியாபாரம் சிறக்கும்.

ரிஷபம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும்.

மிதுனம்: மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் உண்டு.

கடகம்: பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கான மாற்று வழியை கண்டறிவீர். குடும்பத்தில் உங்க கை ஓங்கும்.

சிம்மம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும்.

கன்னி: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் ஏற்படும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

துலாம்: உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ஷேர், கமிஷன் மூலம் பணம் வரும்.

விருச்சிகம்: வீட்டில் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு.

தனுசு: தம்பதிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர். தாயாரின் உடல்நிலை சீராகும்.

கும்பம்: வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.

மீனம்: ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE